திருத்தணி, திருத்தணி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு காணிக்கையாக உண்டியலில் பணம், நகை போன்றவற்றை செலுத்துகின்றனர். இந்நிலையில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணத்தை எண்ணுவதற்கு அறநிலையத்துறை கமிஷனரிடம் அனுமதி பெற்று, திருத்தணி முருகன் கோவில் நிர்வாகம் மலைக் கோவிலில் உள்ள தேவர் மண்டபத்தில் இணை கமிஷனர் ரமணி, அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், அறங்காவலர்கள் சுரேஷ்பாபு, நாகன், மோகனன், உஷா ஆகியோர் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட கோவில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை கொண்டு உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. உண்டியல் காணிக்கை இதில் 35 நாள் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 33 லட்சத்து 88 ஆயிரத்து 490 மற்றும் திருப்பணி உண்டியல் காணிக்கையாக ரூ.4 லட்சத்து 20 ஆயிரத்து 43 என மொத்தம் ரூ.2 கோடியே 38 லட்சத்து 8 ஆயிரத்து 533 கிடைத்துள்ளது. மேலும் தங்கம் 583 கிராம், வெள்ளி 13 கிலோ 536 கிராம் காணிக்கையாக கிடைத்திருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/devotional/thirutani-murugan-temples-banknote-offering-is-rs-233-crore




