கீவ், உக்ரைன், ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த முயற்சிகளை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மேற்கொண்டார். ஆனால் முயற்சி தோல்வியடைந்த நிலையில் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 9 பேர் பலி இந்நிலையில், உக்ரைன் மற்றும் ரஷியா நேற்று மாறிமாறி ஏவுகணை, டிரோன் மூலம் தாக்குதல் நடத்தின. ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடத்தப்பட்ட உக்ரைன் ஏவுகணை தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். அதேபோல், உக்ரைனின் சுமி நகர் மீது ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் இரு தரப்பு மோதலில் மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர். அதேபோல், 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/world/ukraine-russia-conflict-9-killed




