சென்னை, நடிகர் சுஹாஸின் பிறந்தநாளை முன்னிட்டு ‘மண்டாடி’ படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் சுஹாஸுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை படக்குழு தெரிவித்துள்ளது. கதாநாயகனாக உயர்ந்த சூரி தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த சூரி, தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில், இயக்குநர் மதிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். மீனவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் சுஹாஸ் ‘கலர் போட்டோ’, ‘ரைட்டர் பத்மபூஷண்’, ‘அம்பாஜிபேட்டா மேரேஜ் பேண்ட்’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான தெலுங்கு நடிகர் சுஹாஸ், ‘மண்டாடி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் செப்டம்பர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பிறந்தநாளில் வெளியான ஸ்பெஷல் போஸ்டர் இந்த நிலையில், நடிகர் சுஹாஸின் பிறந்தநாளை முன்னிட்டு ‘மண்டாடி’ படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் சுஹாஸுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை படக்குழு தெரிவித்துள்ளது. இதையடுத்து, ரசிகர்களும் சமூக வலைதளங்களில் சுஹாஸுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். - Actor Birthday Poster. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/a-special-poster-released-by-the-mandadi-film-crew-on-suhass-birthday




