Essel குழுமம் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவு செய்திருப்பதையொட்டி, Zee தமிழ், Zee திரை மற்றும் தமிழ் Zee 5 இணைந்து சென்னை ITC கிராண்ட் சோழா ஹோட்டலில் மிகப் பிரமாண்டமான விழாவை நடத்தியது. தமிழ் திரையுலகம் மற்றும் தொலைக்காட்சித் துறையைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள், படைப்பாளிகள், எழுத்தாளர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். Kamal Haasan இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் ஆண்டனி, ஆர்யா, விஜயகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். அதேபோல் Zee தமிழ் தொலைக்காட்சி நட்சத்திரங்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். விழாவில் கலந்துகொண்டு பேசிய கமல்ஹாசன், “ஒரு நிறுவனம் நூறு ஆண்டுகள் வெற்றிகரமாக இயங்குவது என்பது அதன் உறுதியையும், தொலைநோக்குப் பார்வையையும், காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் திறனையும் காட்டுகிறது. தொழில்நுட்பங்கள் எவ்வளவு மாறினாலும், நல்ல கதைகளுக்கான மக்களின் வரவேற்பு ஒருபோதும் குறையாது. Kamal Haasan இந்தியாவின் மொழிகள், கலாச்சாரங்கள் மற்றும் கதைகள் உலகளாவிய பார்வையாளர்களைக் கவரும் வலிமை கொண்டவை. இந்தியக் கதைகளை உலக அரங்கில் கொண்டு செல்வதற்கான முயற்சிகளில் நான்னும் தொடர்ந்து பங்கெடுக்கத் தயார்,” எனப் பகிர்ந்துகொண்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://cinema.vikatan.com/kollywood/kamal-haasan-speech-essel-group-100-years-event-zee-tamil




