ரியாத், துபாயில் இருந்து இஸ்ரேல் புறப்பட்ட விமானம் சவுதியில் தரையிறக்கப்பட்டது. விமானம் சவுதியில் தரையிறக்கம் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு இன்று ஏர் துபாய் விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 180 பேர் பயணம் செய்தனர். விமானம் சவுதி - ஜோர்டான் வான் எல்லையில் பறந்தபோது விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தின் கேப்டனுக்கும், துணை கேப்டனுக்கு (விமானிகள்) இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விமானத்தின் கேப்டனை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்திவிட்டு விமானத்தின் துணை கேப்டன் விமானத்தை கடத்தி தரையில் மோதச்செய்து விபத்தை ஏற்படுத்த முயற்சித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, பயணிகளின் உதவியுடன் விமானி விமானத்தை சவுதி அரேபியாவில் பத்திரமாக தரையிறக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே விமானத்தில் பயணிகள் உடையில் இருந்த சில விமானிகள் உதவியுடன் விமானம் சவுதி அரேபியாவில் தரையிறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் விமானத்தை இயக்கிய கேப்டன் ஐக்கிய அரபு அமீரக நாட்டை சேர்ந்தவர் என்பதும், விமானத்தை கடத்தி தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டது ஓமன் நாட்டை சேர்ந்த துணை கேப்டன் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் பயங்கரவாத செயலாக இருக்கலாம் என இஸ்ரேல் சந்தேகம் எழுப்பியுள்ளது. அதேவேளை, விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் பத்திரமாக சவுதியில் தரையிறங்கிய நிலையில் மாற்று விமானம் மூலம் பயணிகளை இஸ்ரேல் அழைத்து செல்ல ஏர்துபாய் விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதேவேளை, இந்த சம்பவம் பயங்கரவாத முயற்சியா? விமானிகளுக்கு இடையேயான தனிப்பட்ட மோதலா? என்பது குறித்து இஸ்ரேல் அரசு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/world/dubai-to-israel-flight-makes-emergency-landing-in-saudi-arabia



