சென்னை, 'சுதேசி', 'மேக் இன் இந்தியா' என்பதெல்லாம் மோடியின் வெறும் விளம்பர நாடகம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- 'சுதேசி', 'மேக் இன் இந்தியா' என்பதெல்லாம் மோடியின் வெறும் விளம்பர நாடகம்! செப்டம்பர் 19, 2025 அன்று DGTR பரிந்துரைத்தும், 11 மாதங்களாக (Customs Notification) சுங்க அறிவிப்பு தராமல் நிதி அமைச்சகம் இழுத்தடிப்பு. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் Heavy Cranes மீது Anti-Dumping Duty விதிக்க DGTR பரிந்துரைத்தும், சுங்க அறிவிப்பு தராமல் நிதி அமைச்சகம் இழுத்தடிக்கிறது. இதன் விளைவு? 5 முன்னணி உள்நாட்டு கிரேன் (Crane) உற்பத்தியாளர்கள் தொழிலை மூடும் அவலநிலை! மோடி அரசாங்கம் யாருக்காக செயல்படுகிறது? இந்திய உற்பத்தியாளர்களுக்காகவா அல்லது சீன நிறுவனங்களுக்காகவா? அனைத்து துறைகளிலும் பாஜகவின் இந்த போலித்தனம் ஒவ்வொன்றாக அம்பலமாகி வருகிறது! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/swadeshi-and-make-in-india-are-nothing-but-modis-publicity-stunts-manickam-tagore




