வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்துள்ள மஞ்சு கிருஷ்ணாபுரம் கிராமத்தில் சி.எஸ்.ஐ சியோன் மலை தேவாலய நிர்வாகத்தின் சார்பாக போதகர் ஜோன் கிருபாகரன் என்பவரால் புதிதாக பெரிய தேவாலயம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இன்று மாலை வேளையில், மேல் தளத்துக்கான கான்கிரீட் போடும் பணியில் சுமார் 12-க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சாரம் சரிந்ததில் சென்டரிங் கட்டுமானம் மொத்த குவியலாக விழுந்ததில் தொழிலாளிகள் சிக்கிக்கொண்டு வெளியே வரமுடியாமல் அலறினர். சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் அங்கு கூடி அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்தவுடன் திருவலம் காவல் நிலைய போலீஸாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். விபத்து இடிபாடுகளில் சிக்கிய 8 பேர் விரைவாக மீட்கப்பட்ட நிலையில், வேலூரில் உள்ள சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் 4 பேரும், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 பேரும் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, 2 தொழிலாளிகள் பலியானதாகவும் முதற்கட்ட தகவல் கிடைத்திருக்கிறது. இடிபாடுகளில் மேலும் ஒருவர் சிக்கியுள்ளதாகவும், அவரின் நிலை என்ன ஆனது? என்பதும் அதிர்ச்சியளிக்கும் வகையில் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. அரக்கோணத்தில் இருந்தும் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்திருக்கின்றனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால், சம்பவ பகுதியே பரபரப்பாகக் காணப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/crime/accidents/accident-during-church-construction-near-katpadi-intensive-efforts-underway-to-rescue-workers




