மாஸ்கோ, அமெரிக்க விமானப்படையின் பிரமாண்ட சரக்கு போர் விமானம், ரஷியாவில் திடீரென தரையிறங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மற்றும் ரஷியா இடையே கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இதை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மேற்கொண்ட முயற்சி களுக்கு பலன் கிடைக்கவில்லை. இதனால், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையே கருத்து மோதலும் ஏற்பட்டது. ரஷியாவில் தரையிறங்கிய அமெரிக்க போர் விமானம் இந்நிலையில், அமெரிக்க விமானப்படையின், பிரமாண்ட, 'சி -17 ஏ குளோப் மாஸ்டர்' என்ற சரக்கு விமானம் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள ரஷிய ராணுவத்தின் விமானப்படைத்தளத்தில் நேற்று திடீரென தரையிறங்கியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்க போர் விமானம் தரையிறங்கியது குறித்து எந்தத் தகவலும் இல்லை என, ரஷிய அதிபர் மாளிகை கூறியது. இந்நிலையில், அமெரிக்க உளவு அமைப்பான, சி.ஐ.ஏ.,வின் தலைவர். ஜான் ராட்கிளிப், இந்த விமானத்தில் பயணித்த தகவல் வெளியானது. சிஐஏ தலைவரானப்பின் ராட்கிளிப் ரஷியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். தற்போது போரை உக்ரைன் முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் முயற்சி யில் தேக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், ராட்கிளிப்பின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அவர் இன்று ரஷிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/world/us-military-cargo-plane-lands-in-russia-stirs-tension




