தூத்துக்குடி, தூத்துக்குடியில் பைக் மீது லாரி மோதிய விபத்தில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேற்கு வங்க மாநில வாலிபர் மேற்கு வங்க மாநிலம், பஸ்சிம் மேதினிபூர் மாவட்டம், மிர்சாபூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக்தாஸ் மகன் கோகன்தாஸ் (வயது 28). இவர் தூத்துக்குடி புதிய துறைமுகப் பகுதியில் கட்டப்பட்டு வரும் விளையாட்டு மைதானக் கட்டிடத்தில், தனியார் கட்டுமான நிறுவனத்தின் கீழ் கடந்த ஒரு மாதமாக தங்கிப் பணியாற்றி வந்தார். பைக் மீது கார் மோதிய விபத்தில் பலி இன்று கோகன்தாஸ் முத்தையாபுரம் பகுதியில் உள்ள கடைக்குச் சென்றுவிட்டு தனது பைக்கில் தெர்மல்நகர் விலக்கு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சரக்கு ஏற்றிவிட்டு வந்த 40 அடி கண்டெய்னர் லாரி எதிர்பாராதவிதமாக கோகன்தாஸின் பைக் மீது மோதியது. இந்த கோர விபத்தில் பலத்த காயமடைந்த கோகன்தாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தெர்மல்நகர் போலீசார், கோகன்தாஸின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக லாரி ஓட்டுநரான, தூத்துக்குடி முள்ளக்காடு தேவி நகரைச் சேர்ந்த ராஜீவ்காந்தி(34) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-a-youth-from-the-northern-state-died-in-an-accident-where-a-lorry-hit-his-bike




