கொல்கத்தா, மேற்குவங்காளத்தில் எம்.எல்.ஏ. பயணம் செய்த கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மேற்குவங்காள மாநிலம் ஹூக்ளி மாவட்டம் சிரம்புரா நகரில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி தலைமை தாங்கி நடத்தினார். எம்.எல்.ஏ. கார் மீது தாக்குதல் இந்நிலையில், இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. குனல் கோஷ் தனது காரில் பயணம் மேற்கொண்டார். அவர் ஹூக்ளி மாவட்டத்தின் உத்தர்பரா பகுதியில் வந்த போது அவரது காரை வழிமறித்து கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் எம்.எல்.ஏ. குனல் கோஷ் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. மேலும், குனல் கோஷ் மீது முட்டை வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை தொடர்ந்து இதுகுறித்து எம்.எல்.ஏ. குனல் போலீசில் புகார் அளித்தார். மேலும், இந்த தாக்குதலை பாஜக எம்.எல்.ஏ. தீபன்ஜன் ஆதரவாளர்கள் நடத்தியதாக குனல் குற்றஞ்சாட்டியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/west-bengal-mla-car-attacked




