சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. Vishwanath & Sons வெங்கி அட்லூரி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், மமிதா பைஜூ, ரவீனா டாண்டன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் தேங்க்ஸ் மீட் நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மமிதா பைஜூ பேசுகையில், "நீங்க இன்னும் 'விஸ்நாத் & சன்ஸ்' படம் பார்க்கலன்னா, தயவுசெஞ்சு தியேட்டர்ல போய் பாருங்க. ஏன்னா, தியேட்டரை விட்டு வெளிய வரும்போது மனசுக்குள்ள ஒரு நிறைவு கிடைக்கும். படத்தைப் பார்த்துட்டு நிறைய பேர் பாராட்டினாங்க, அதுல மறக்க முடியாத நினைவுகள் நிறையவே இருக்கு. ஆனா, என்னை ரொம்பவே நெகிழ வச்ச ஒரு விஷயம் இருக்கு. ஒரு ரெண்டு மூணு வீடியோக்கள் நான் பார்த்தேன். Mamitha Baiju அதுல சின்னக் குழந்தைகள் எல்லாம் திரையரங்குல 'பட்டாம்பூச்சி' பாட்டு வரும்போதும், என்னுடைய நகைச்சுவைக் காட்சிகளின்போதும் சிரிச்சு மகிழ்ந்து, தியேட்டர் சீட்ல இருந்து எந்திரிச்சு கொண்டாடினாங்க. அவங்களைப் பார்த்ததும் எனக்கு என்னுடைய பழைய நினைவுகள்தான் ஞாபகம் வந்தது. ஒரு 10-15 வருஷத்துக்கு முன்னாடி, நான் தியேட்டருக்குப் போய் ஒரு நல்ல படத்தையோ அல்லது எனக்குப் பிடிச்ச ஒரு கதாபாத்திரத்தையோ பார்த்து எப்படி கொண்டாடினேனோ, அதே மாதிரி இப்போ சின்னக் குழந்தைகள் என் படத்தைக் கொண்டாடுறதைப் பார்க்கும்போது ரொம்பவே மகிழ்ச்சியா இருந்தது. அந்த உணர்வை வார்த்தைகளால சொல்லி விவரிக்கவே முடியாது" எனப் பகிர்ந்திருக்கிறார். Vishwanath & Sons Review: காதலில் வயது வித்தியாச சிக்கல் - முதிர்ச்சியான உரையாடலாகிறதா படம்? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://cinema.vikatan.com/kollywood/mamitha-baiju-speech-thanks-meet-theater-response




