திருநெல்வேலி, திருநெல்வேலி மாவட்ட போலீசாரின் தீவிர கண்காணிப்பு மற்றும் நடவடிக்கையால் தாழையூத்து அருகே 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து, 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார் சோதனை திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சுதன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தாழையூத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு அரிசி ஆலை அருகே, சந்தேகப்படும்படி பைக்கில் வந்த நபர்களை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அந்த சோதனையில், தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரத்தைச் சேர்ந்த சுடலை மணிகண்டன் (வயது 25), முத்துராமன்(28), உதயா(20) மற்றும் முத்துராஜ்(23) ஆகிய 4 பேரும், அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 6 கிலோ கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. 6 கிலோ கஞ்சா பறிமுதல், 4 பேர் கைது இதுகுறித்து தாழையூத்து காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் NDPS Act-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து, மேற்சொன்ன 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/tirunelveli-6-kg-of-ganja-seized-4-people-arrested




