சென்னை, தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து. இது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தேசிய கைத்தறி தினம் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, மக்கள் அனைவரும் கைத்தறி மற்றும் கதர் ஆடைகளை அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். விஜயகாந்த் தனது வாழ்நாள் முழுவதும் கைத்தறி ஆடைகளை அணிவதை ஒரு கடமையாக கொண்டிருந்தார். ஒரு மனிதனுக்கு இரு கண்கள் எப்படி முக்கியமோ, அதுபோல் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு விவசாயமும் நெசவும் இரு கண்கள் என்று விஜயகாந்த் கூறுவார். எளிமையான வாழ்க்கை 2003ஆம் ஆண்டு நெசவாளர்களுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, ஒரு கட்சியினர் கஞ்சி தொட்டி திறந்தனர்; மற்றொரு கட்சியினர் பிரியாணி வழங்கினர். ஆனால் விஜயகாந்த், நெசவாளர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன், ரூ.1 கோடிக்கும் மேல் நிதியை வழங்கினார். மேலும், நெசவாளர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக துணிகளை வழங்கினார். அவரது எளிமையான வாழ்க்கை முறை அனைவருக்கும் முன்மாதிரியாகும். கோடைக்காலம் ஆடை மகாத்மா காந்தியடிகள் சுதேசி இயக்கத்தின் அடையாளமாக கதர் ஆடையை முன்னிறுத்தினார். அந்நிய ஆடைகளை புறக்கணித்து, இந்தியாவில் தயாரிக்கப்படும் கைத்தறி மற்றும் கதர் ஆடைகளை அணிவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தையும், சுதந்திர போராட்டத்தையும் வலுப்படுத்தினார். கைத்தறி என்பது ஒரு துணி மட்டுமல்ல; அது தன்னிறைவு, தேசப்பற்று மற்றும் இந்திய பாரம்பரியத்தின் சின்னமாகும். கைத்தறி ஆடைகள் கோடைக்காலத்தில் அணிவதற்கு மிகவும் வசதியானவை. இயற்கை இழைகள் இயற்கை இழைகளால் நெய்யப்படுவதால் இவை உடலுக்குக் குளிர்ச்சியையும், ஆரோக்கியமான உணர்வையும் அளிக்கின்றன. மேலும், கைத்தறி ஆடைகளை பயன்படுத்துவதன் மூலம் நம் நெசவாளர்களின் வாழ்வாதாரத்திற்கும் ஆதரவாக இருக்க முடியும். எனவே, தேசிய கைத்தறி தினமான இன்று மட்டுமல்லாமல், ஆண்டின் அனைத்து நாட்களிலும் கைத்தறி மற்றும் கதர் ஆடைகளை தொடர்ந்து பயன்படுத்துவோம். பாரம்பரியத்தை பாதுகாப்போம் இந்தியப் பாரம்பரியத்தைப் பாதுகாப்போம்; உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிப்போம்; நம் நெசவாளர்களின் உழைப்பை மதிப்போம். தமிழ்நாட்டின் கைத்தறி நெசவாளர்கள், கைத்தறி இணைத் தொழிலாளர்கள் அனைவருக்கும் தேமுதிக சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறோம். கதர் ஆடைகள் அணிவோம், கைத்தறியை காப்போம்; இந்தியப் பாரம்பரியத்தை போற்றுவோம்! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/premalatha-vijayakanth-message-on-national-handloom-day




