மகாராஷ்டிராவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் புதிய கமிஷனராக ஐ.ஏ.எஸ் அதிகாரி துகாராம் முண்டே நியமிக்கப்பட்டதில் இருந்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவரது செயல்பாடுகளால் மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள உணவகங்கள், பால் பண்ணைகள் கலக்கத்தில் இருக்கின்றன. அமேசான் காலாவதியான உணவுப் பொருள்களை அறிவியல் பூர்வமாக அகற்றுவதற்குப் பதிலாக, அதன் ஒப்புதல் இல்லாமல் ஒரு ஏஜென்சி மூலம் அப்புறப்படுத்தியதாக கூறி அமேசான் நிறுவனத்தின் குடோன் லைசென்ஸை உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சஸ்பெண்ட் செய்துள்ளது. மும்பை அருகில் உள்ள பிவாண்டி என்ற இடத்தில் அமேசான் குடோன் இருக்கிறது. இந்த நடவடிக்கையை எதிர்த்து அமேசான் சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு விசாரணைக்கு வந்தபோது அமேசான் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் வெங்கடேஷ் தோண்ட், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சி மூலம் கழிவுகள் அகற்றப்படுகிறது. ஜூன் 24 ஆய்வுக்குப் பிறகு உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை(எஃப்.டி.ஏ) சேமிப்பு கிடங்கின் உரிமத்தை சஸ்பெண்ட் செய்தது. மேலும் அமேசானின் மேல்முறையீடு மனு நிலுவையில் இருந்தபோது, ஜூலை 1 அன்று ஒரு நோட்டீஸை அனுப்பிவிட்டு உரிமத்தை ரத்து செய்ததாக தோண்ட் கூறினார். இதற்கு கருத்து தெரிவித்த நீதிபதிகள், எஃப்.டி.ஏ தனது கட்டுப்பாட்டில் வரும் அனைத்து வணிக நிறுவனங்களையும் மூட விரும்புகிறதா என்று கேள்வி எழுப்பியதோடு, அதன் இடைநீக்கத்திற்கு(சஸ்பெண்ட்) எதிரான மேல்முறையீடு மனு நிலுவையில் இருக்கும்போது உணவு உரிமத்தை ரத்து செய்ய முடியாது. மேல்முறையீட்டின் போது, எப்படி ரத்து செய்ய முடியும்? மேல்முறையீட்டு காலத்தில், அத்தகைய நடவடிக்கை எடுக்க முடியாது என்பது சட்டம். எனவே நீங்கள் ஒரு கொசுவை வாளால் கொல்ல முயற்சிக்கிறீர்கள். நடைமுறையை பின்பற்ற வேண்டும். உங்கள் செயல்பாடுகள் பாராட்டுக்குறியதுதான். ஆனால் எதையும் முறையாக செய்யுங்கள். மும்பை, தானே, பால்கர், புனேயில் உள்ள வணிக நிறுவனங்களை மூட விரும்புகிறீர்களா என்று நீதிபதிகள் கேள்வி கேட்டனர். ஐ.ஐ.டி கேண்டீன் மூட உத்தரவு மும்பையில் உள்ள ஐஐடி வளாகத்தில் உணவு உரிமம் இல்லாமல் இரண்டு கேன்டீன்களை இயக்கி வருவதாக உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்டிஏ) தெரிவித்துள்ளது. அதோடு உடனடியாக கேண்டீனை மூடவும் உத்தரவிட்டுள்ளது. இதே போன்று ஐ.ஐ.டி வளாகத்தில் வெளியில் உள்ள நபரால் நடத்தப்படும் மற்றொரு கேன்டீனுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் எம்.எம்.ஆர்.டி.ஏ அலுவலகத்தில் உள்ள ஒரு கேன்டீன் உரிமம் இல்லாமல் இயங்கி வருவதைக் கண்டறிந்து, கடந்த வார இறுதியில் அதனை மூட நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தேவையான அனுமதிகளைப் பெற்ற பிறகு அது மீண்டும் செயல்படத் தொடங்கியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/trending/food-licenses-of-amazon-and-iit-mumbai-cancelled-dont-kill-a-mosquito-with-a-sword-bombay-high-court-criticizes-move




