சென்னை, இன்று நடைபெற்று வரும் 27-வது லீக் ஆட்டத்தில் திருப்பூருக்கு 170 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது சேலம். டிஎன்பிஎல் 8 அணிகள் பங்கேற்றுள்ள 10வது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 4ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல்கட்ட போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தொடரின் 2ம் கட்ட போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. திருப்பூர் - சேலம் அதன்படி, டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மாலை 3.30 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வரும் 27-வது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் - சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற சேலம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 170 ரன்கள் இலக்கு அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சேலம் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கார்த்திக் 57 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்க உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/cricket/tnpl-salem-sets-a-target-of-170-runs-for-tiruppur




