காத்மாண்டு, நேபாளம் தேசத்தில் இயற்கை சீற்றங்கள் எப்போதுமே கோர முகத்தை காட்டி வருகின்றன. தற்போது அங்கு ஏற்பட்டுள்ள நிலச்சரிவு மற்றும் வெள்ள பாதிப்புகளுக்கு மத்தியில், மனிதர்களை மிஞ்சிய ஒரு விசுவாசமுள்ள நாயின் செயல்பாடு ஒட்டுமொத்த மீட்புக்குழுவினரையும் கண் கலங்க வைத்துள்ளது. உருக்குலைந்த திரிசூலி பஜார் ஒரு காலத்தில் வீடுகள் நிறைந்து எந்நேரமும் பரபரப்பாக காணப்பட்ட திரிசூலி பஜார் பகுதி, தற்போது ஏற்பட்ட இயற்கை பேரிடரால் முற்றிலும் உருக்குலைந்து போய்விட்டது. வீடுகள் இருந்ததற்கான அடையாளமே தெரியாத வகையில் அந்த பகுதி முழுவதும் வெறும் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. அங்கு மண்ணுக்குள் புதைந்த உயிர்களை மீட்கும் பணியில், நான்கைந்து ஜே.சி.பி. எந்திரங்களுடன் மீட்புக்குழுவினர் அந்தப் பகுதியிலேயே முகாமிட்டு தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். நகர மறுக்கும் பாசக்கார நாய் சுற்றிலும் மரண ஓலம், ராட்சத எந்திரங்களின் சத்தம் என எதுவும் அந்த பாசக்கார ஜீவனை அசைக்கவில்லை. இடிபாடுகளுக்கு நடுவே, சகதியின் மீது படுத்து கிடக்கும் கருப்பு - வெள்ளை நிறத்திலான ஒரு நாட்டு ரக நாய் மட்டும் அந்த இடத்தை விட்டு துளியும் நகர மறுத்து படுத்து கிடக்கிறது. அதன் கழுத்தில் உரிமையாளர் ஆசையாக கட்டிய கழுத்துப்பட்டையும் அப்படியே உள்ளது. பிஸ்கட் கொடுத்தும் ஏமாற்றம் அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள மற்றொரு ஊழியரான பிக்ரம் தாபா, அந்த நாயை காப்பாற்றி பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்ல முயன்றார். நாய் சாப்பிடும் பிஸ்கெட்டுகளை கொடுத்து, செல்லப்பிராணிகளை அழைக்கும் விதவிதமான பெயர்களை சொல்லி ஆசையாக கூப்பிட்டுப் பார்த்தார். ஆனால், அந்த பாசக்கார நாய் அவரை திரும்பி பார்க்கக் கூட இல்லை. இடிபாடுகளை அகற்றும் போது மட்டும் உற்று பார்க்கிறது. ஆனால், அந்த இடத்தை விட்டு ஒரு அங்குலம் கூட நகர மறுக்கிறது. உருகும் மீட்புக்குழுவினர் என் எஜமானர் எங்கே? நான் வாழ்ந்த வீடு என்ன ஆனது?" என்று கேட்பது போல, அந்த நாய் சோகமே உருவாய் அங்கே அமர்ந்திருக்கிறது. புதைந்து போன உயிர்களுக்கு மத்தியில், இந்த விசுவாசமுள்ள நாயின் செயல்பாடுதான் அங்கு பெரும் பேசுபொருளாக மாறி உள்ளது. அங்கிருந்து அதை அகற்ற முயன்ற மீட்புக்குழுவினரே, அதன் பாசத்தையும் விசுவாசத்தையும் பார்த்து நெகிழ்ந்து போய் நிற்கின்றனர். இந்த நெகிழ்ச்சி சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/world/loyal-dog-refuses-to-leave-ruins-nepal-flood




