கடையநல்லூர், கடையநல்லூர் அருகே மூதாட்டியிடம் இருந்து 44 கிராம் தங்க நகைகளை வீடு புகுந்து திருடிய வழக்கில் பக்கத்து வீட்டு பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். நகை திருட்டு தென்காசி மாவட்டம் மேல கடையநல்லூர் அருகே மூதாட்டி கணபதி அம்மாள் (வயது 73) வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் ஓட்டைபிறித்து வீட்டிற்குள் குதித்தனர். பின்னர், அங்கிருந்த மூதாட்டியை கட்டிப்போட்டு நகையை கழத்தி கொடுக்குமாறு கத்தியைக் காட்டி மிரட்டினர். இதற்கு பயந்த அவர் தனது காதில் இருந்த கம்மல் மற்றும் கழுத்தில் இருந்த 44 கிராம் தங்க நகைகளை கழத்தி கொடுத்துள்ளார். இது குறித்து கடையநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கடையநல்லூர் போலீஸ் ஆய்வாளர் திரு.கிறிஸ்டி என்பவர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். போலீசார் விசாரணை விசாரணையின்போது அந்த பகுதியில் உள்ள தோப்பில் ஆரங்சு நிற பைக் ஒன்று ஒரே இடத்தில் நீண்ட நேரமாக இருந்தது. பைக் உரிமையாளர் வராததால் சந்தேகமடைந்த போலீசார் அந்த பைக்கின் நம்பர் பிளேட் எண்ணை வைத்து விசாரணை செய்து வந்தனர். அப்போது, அந்த பைக்கின் உரிமையாளர் காஞ்சிபுரத்தை சேர்ந்த கோகுல் கண்ணன் (வயது 36) என்பது தெரியவந்தது. அதன் மூலமாக கோகுல கண்ணனின் மொபைல் சிக்னலை வைத்து அவரது இருப்பிடத்தை கண்காணித்த போலீசார் அவர் சென்னையில் இருப்பதை கண்டுபிடித்து அங்கு சென்று அதிரடியாக அவரை மடக்கிப்பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன. கைது மூதாட்டியின் வீட்டின் அருகில் வசிக்கும் வேலம்மாள் (வயது 48) என்பவர் மற்றும் தனது ஆண் நண்பர் சுரேஷ் என்பவருடன் இணைந்து இந்த திருட்டு சம்பவத்தை நடத்தியது விசாரணையில் தெரிய வந்தது. கோகுல கண்ணன் திருடுவதற்கு தனது பைக்கை கொடுத்ததும், கூட்டாளியாக செயல்பட்டதையும் தெரிவித்தார். இதையடுத்து வேலம்மாள் மற்றும் கோகுல கண்ணனை போலீசார் கைது செய்து, அவர்கள் திருடிய 44 கிராம் நகையையும் மீட்டு மூதாட்டியிடம் கொடுத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சுரேஷ் என்பவரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/kadayanallur-2-arrested-for-stealing-jewellery-from-an-elderly-woman



