சென்னை, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தனியாருக்கு சொந்தமான வெடிபொருள்கள் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்-அமைச்சர் விஜய், அவர்களுக்கு நிதியுதவி வழங்குவது தொடர்பான உத்தரவை பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- “விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், ஒத்தையால் கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான வெடிபொருள்கள் தொழிற்சாலையில் இன்று (05.09.2026), எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் அங்கு பணியிலிருந்த மீனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாடசாமி (வயது 33), த/பெ. ராமர் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி அறிந்து மிகவும் வருத்தமும், வேதனையும் அடைந்தேன். இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/virudhunagar-financial-assistance-for-the-families-of-those-who-died-in-the-explosion-accident-chief-minister-vijay-announces



