இன்ஸ்டாவில் இருந்து வாட்ஸ் அப்பிற்கு ரீல்ஸ் பகிர்வதில் தற்போது இருக்கும் நடைமுறையை மாற்றி எளிதாக பகிரும் வசதியை மெட்டா நிறுவனம் தற்போது சோதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மெட்டா நிறுவனம் சோதித்து வரும் புதிய வசதி ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டகிராம் உள்ளது. குறுஞ்செய்தி அனுப்பும் தளமாக உள்ள வாட்ஸ் அப்பில், தங்கள் நட்பு வட்டத்தில் உள்ளவர்களுக்கு பிடித்தமான வீடியோக்கள், இமேஜ்களையும் பயனர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். குறிப்பாக பிடித்தமான ரீல்ஸ்களை வாட்ஸ் அப்புகளில் பலரும் பகிர்வதை பார்க்க முடிகிறது. இன்ஸ்டாவில் இருந்து வாட்ஸ் அப்பிற்கு ரீல்ஸ் பகிர்வதில் தற்போது இருக்கும் நடைமுறையை மாற்றி எளிதாக பகிரும் வசதியை மெட்டா நிறுவனம் தற்போது சோதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு: ‘அக்கவுண்ட்ஸ் சென்டர்’ மூலம் இணைக்கலாம் இன்ஸ்டாகிராம் அல்லது பேஸ்புக்கில் இருக்கும் புகைப்படம், வீடியோ, ரீல்ஸ் போன்றவற்றை வாட்ஸ்அப்பில் பகிர வேண்டுமென்றால், தனியாகச் சேமிப்பது அல்லது இணைப்பைப் பகிர்வது போன்ற நடைமுறைகள் தேவைப்படும். இதை எளிதாக்கும் புதிய வசதியை வாட்ஸ்அப் சோதித்து வருகிறது. புதிய வசதியின்படி, இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் கணக்குகளை வாட்ஸ்அப்புடன் ‘அக்கவுண்ட்ஸ் சென்டர்' (Accounts Center) மூலம் இணைத்துக்கொள்ளலாம். பீட்டா பயனர்களிடம் சோதனை அதன் பிறகு வாட்ஸ்அப்பில் புகைப்படம் அல்லது வீடியோ தேர்வு செய்யும் பகுதியிலேயே, இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் ஏற்கனவே பதிவிட்டுள்ள புகைப்படங்கள், வீடியோக்கள், ரீல்ஸ் உள்ளிட்டவற்றைப் பார்க்க முடியும். அவற்றில் தேவையானதைத் தேர்வு செய்து வாட்ஸ்அப் சாட்டில் நண்பர் களுக்கு அனுப்பலாம் அல்லது நேரடியாக ஸ்டேட்டஸாக வைக்கலாம். இதனால் ஒரே புகைப்படம் அல்லது வீடியோவை மீண்டும் பதிவிறக்கம் செய்து வாட்ஸ்அப்பில் பதிவேற்ற வேண்டிய அவசியம் குறையும். தற்போது குறிப்பிட்ட பீட்டா பயனர்களிடம் சோதிக்கப்பட்டு வரும் இந்த வசதி, மேலும் பல பயனர்களுக்குப் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/world/you-can-now-easily-share-insta-reels-on-whatsapp-a-great-new-update-from-meta




