டோக்கியோ, ஜப்பானில் சைக்கிள் விபத்தில் சிக்கிய இந்தியப் பெண் ஒருவருக்கு, அங்கிருந்த உள்ளூர் கடைக்காரர் ஒருவர் கட்டணமே வாங்காமல் உதவி செய்த நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மழைநாள் விபத்து சோனம் மிதா என்ற இந்தியப் பெண் ஜப்பானில் வசித்து வருகிறார். கடந்த வாரம் பெய்த பலத்த மழையில், மிதா தனது சைக்கிளில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வழுக்கி கீழே விழுந்தார். இந்த விபத்தில் அவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதுடன், அவரது சைக்கிளின் ஹேண்டில் பாரும் வளைந்து சேதமடைந்தது. நெகிழ்ச்சியூட்டிய கடைக்காரர் அலுவலகத்தில் முதலுதவி பெற்ற சோனம், மதிய உணவு இடைவேளையின் போது அருகில் இருந்த சைக்கிள் பழுதுபார்க்கும் கடைக்கு சென்றார். ஜப்பானில் பழுதுபார்ப்பு பணிகளுக்கு அதிக கட்டணம் ஆகும் என்பதால், தேவையான பணத்துடன் அவர் சென்றிருந்தார். ஆனால், அங்குள்ள கடைக்காரர் சோனமின் சைக்கிளைப் பார்ப்பதற்கு முன்பாக, அவரது காயங்களைப் பார்த்து நலம் விசாரித்தார். பின்னர் சைக்கிளைச் சரிசெய்து கொடுத்தார். பணம் வாங்க மறுப்பு வேலை முடிந்ததும் சோனம் கட்டணம் எவ்வளவு என்று கேட்டபோது, அந்த ஜப்பானிய கடைக்காரர் புன்னகையுடன் "நோ பிரைஸ்" என்று கூறி பணத்தை வாங்க மறுத்துவிட்டார். அந்நிய நாட்டுப் பெண் என்றும் பாராமல் அவர் காட்டிய இந்த மனிதநேயம் சோனமை நெகிழ வைத்தது. பதிலுக்கு ஒரு பரிசு கடைக்காரரின் அன்பால் ஈர்க்கப்பட்ட சோனம், அருகில் இருந்த இந்திய உணவகத்திற்கு சென்று அவருக்காக சூடான இந்திய உணவை பார்சல் வாங்கிக் கொண்டு மீண்டும் மழையிலேயே அந்த கடைக்கு சென்றார். சோனம் தனக்காக உணவு கொண்டு வந்திருப்பதை அறிந்த கடைக்காரர் நெகிழ்ச்சியடைந்து, அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார். வைரலாகும் பதிவு இந்த நெகிழ்ச்சியான முழு சம்பவத்தையும் சோனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாகப் பகிர்ந்துள்ளார். "மனிதநேயத்திற்கு மொழி எல்லைகள் இல்லை" என்பதை உணர்த்தும் இந்த வீடியோ, இணையத்தில் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/world/japanese-shopkeeper-repairs-bicycle-for-free-for-indian-woman-involved-in-an-accident




