செங்கல்பட்டு மாவட்டத்தின் மதுராந்தகம் (தனி), திருப்பூர் மாவட்டத்தின் தாராபுரம் (தனி) ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதிமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் வெற்றி பெற்றிருந்த மரகதம் குமாரவேல், தாராபுரம் தொகுதியில் வெற்றி பெற்றிருந்த சத்தியபாமா ஆகிய இருவரும் தங்கள் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, விஜய் தலைமையிலான தவெக-வில் இணைந்ததால் இவ்விரு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டு, இந்த இடைத்தேர்தல் களம் உருவாகி இருக்கிறது. தி.மு.க சட்டத்துறை இணைச்செயலாளர் பரந்தாமன் இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் முன்னாள் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், திமுக சட்டத்துறை துணைச் செயலாளருமான ஐ.பரந்தாமன் போட்டியிடுகிறார். தாராபுரம் தொகுதியில் திமுக வழக்கறிஞர் மற்றும் மகளிர் அணியைச் சேர்ந்த எஸ்.சுகன்யா போட்டியிடுகின்றனர். இந்நிலையில் மதுராந்தகம் தொகுதியில் திமுக வெற்றி பெற்றால் ஜனவரி மாதம் தவெக ஆட்சி கவிழும் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்திருக்கிறார். `என் பொறுப்பு' - அடித்து ஆடிய உதயநிதி; இறுதியில் மாறிய பட்டியல்! - பரந்தாமன் தேர்வான பின்னணி மதுராந்தகம் தொகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "சட்டசபைக்கு பரந்தாமன் போல ஒரு ஆள் தேவை. இவர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாகச் சென்றால் அடுத்த ஐனவரி மாதத்திற்குள் தவெக ஆட்சி கவிழும். நான் யாரையும் இழிவுப்படுத்தியும், தவறாகவும் பேசவில்லை. தமிழ்நாட்டின் தலையெழுத்து என் முன்னால் இங்கு அமர்ந்திருக்கக்கூடிய கூட்டணிக் கட்சி தோழர்கள் மற்றும் திமுக தொண்டர்களின் கையில்தான் உள்ளது. ஆர்.எஸ் பாரதி கலைஞர் கருணாநிதி, மு.க.ஸ்டாலினை தவெக இழிவுப்படுத்திப் பேசியதை அடுத்த 21 நாட்கள் மனதில் வைத்துக் கொண்டு பணியாற்ற வேண்டும். திமுகவின் வரலாறை, தமிழ்நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வகையில் 21 நாட்கள் மனதில் வைத்து வைராக்கியமாக வேலை செய்தால் பரந்தாமன் வெற்றி பெறுவது உறுதி. மிசாவின் வரலாறு மதுராந்தகத்தில்தான் தொடங்கியது. இன்றைய சட்டமன்ற உறுப்பினர்கள் யாருக்கும் மிசாவைப் பற்றி தெரியாது. துரைமுருகன், டி.ஆர்.பாலு, மு.க.ஸ்டாலின், என்னைப் போன்றவர்கள்தான் மிசாவின் கொடூரத்தை நேரில் பார்த்தவர்கள்" என்று பேசியிருக்கிறார். பிரதீப் ராஜ் படுகொலை: "முதல்வரை காவல்துறையினரே DUMMY CM ஆக நினைக்கிறார்களா?" - உதயநிதி கேள்வி முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/dmk-wins-in-maduranthagam-tvk-government-will-collapse-in-january-said-rs-bharathi




