லக்னோ காதலருடன் 2 மாத உல்லாசம் அனுபவித்து விட்டு, வீட்டுக்கு திரும்பி வந்த மனைவி, கணவரின் அந்தரங்க உறுப்பில் கடித்து வைத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. உத்தர பிரதேசத்தின் ஹர்தோய் மாவட்டத்தில் வசித்து வருபவர் சாதனா. இவருடைய கணவர் தீபக். இந்த தம்பதிக்கு, 3 வயது பெண் குழந்தை உள்பட 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், தீபக்கின் நண்பருடன் சாதனாவுக்கு நட்பு ஏற்பட்டது. இதன்பின்னர் அவருடனான உறவு நெருக்கமடைந்தது. ஒரு நாள் யாரிடமும் எதுவும் கூறாமல் அவருடன் சாதனா ஓடி விட்டார். 2 மாதங்களாக அவருடனேயே தங்கி, உல்லாசம் அனுபவித்து வந்த சாதனா, நேற்று முன்தினம் கணவரின் வீட்டுக்கு திரும்பியுள்ளார். மூக்கை கடித்த கணவர் அப்போது, சாதனாவுடன் தீபக் வாக்குவாதம் செய்துள்ளார். இதில், இருவருக்கும் மோதல் ஏற்பட்டு வன்முறையில் முடிந்தது. விசயம் போலீஸ் வரை சென்றது. இந்த சம்பவம் பற்றி போலீசார் கூறும்போது, சாதனாவின் மூக்கை தீபக் கடித்து விட்டார் என புகார் பதிவானது. இதனால், தீபக் கைது செய்யப்பட்டு உள்ளார் என்றனர். தீபக், சாதனாவின் தலையில் தாக்கியதுடன், அவருடைய மூக்கை கடித்து, சாக்கடையில் வீசி விட்டார். இந்த சண்டையின்போது மாமனாரும், மாமியாரும் சாதனாவின் கைகளை பிடித்து கொண்டனர் என சாதனா குற்றச்சாட்டாக கூறியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த சாதனாவை மீட்ட போலீசார் அவரை சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். தீபக்கின் நண்பர் எனினும், தீபக்கின் தாய் கூறும்போது, தீபக்கின் நண்பருடன் சாதனா ஓடி விட்டார். இதுபற்றி போலீசிடம் கூறினோம். அவர்கள் சமரசம் செய்து வைத்தனர். ஆனால், யாரும் எதிர்பாராமல் பக்கத்து வீட்டு மாடியில் இருந்து எங்களுடைய வீட்டுக்குள் சாதனா குதித்து விட்டார். குழந்தைகளை அழைத்து செல்ல முற்பட்டார். இந்த தகராறில், தீபக்கின் அந்தரங்க உறுப்புகளை சாதனா கடித்து வைத்து விட்டார். பின்னர், அவராகவே தரையில் தலையைக்கொண்டு மோதி காயம் ஏற்படுத்தி கொண்டார் என கூறினார். இதுதொடர்பாக சாதனாவுக்கு எதிராக புகாரும் அளித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/two-month-affair-with-lover-wife-bites-husbands-private-part




