புதுடெல்லி 2047-ல் வளர்ச்சி அடைந்த இந்தியா உருவாகும் என்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி உரையாற்றினார். டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அவர் பேசும்போது, இன்றைய நாள் வரலாற்று சிறப்பு மிக்க நாள். விடுதலைக்காக லட்சக்கணக்கானோர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். இன்று நாம் 80-வது சுதந்திர தினத்தை கொண்டாடி கொண்டிருக்கிறோம். வந்தே மாதரம் பாடல் வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டை கொண்டாடுகிறோம். செங்கோட்டையில் முதல்முறையாக வந்தே மாதரம் பாடப்படுகிறது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்து உள்ளார். வந்தே மாதரம் பாடல் நாடு முழுவதும் எதிரொலிக்கிறது. அனைவரின் மனதிலும் மூவர்ணம் நிறைந்திருக்கிறது என்றார். முன்னணி பொருளாதார நாடு பெரிய கனவுகள் நம் எண்ணங்களை விரிவாக்கியது. நமது கனவுகள் உயர்ந்ததாக இருக்கும்போது திறனும் உயர்ந்ததாக இருக்கும். நாடு பெருமையுடன் முன்னேறுகிறது. மிக உயர்ந்த இடத்தை நாம் அடைந்துள்ளோம். உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு மனமார்ந்த அஞ்சலி. இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு தேசம் உறுதுணையாக இருக்கும். ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை பார்க்கும் விதம் மாறி இருக்கிறது. 2047-ல் வளர்ச்சி அடைந்த இந்தியா உருவாகும். அனைத்து பிரிவு மக்களும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்கின்றனர். எலக்ட்ரானிக் பொருட்களின் உற்பத்தி 7 மடங்கு உயர்ந்துள்ளது. அனைத்து பிரிவு மக்களும் நாட்டை முன்னேற்றி கொண்டு இருக்கின்றனர். அனைத்து துறைகளிலும் நாம் தற்சார்பு அடைய வேண்டியது அவசியம். முன்னணி பொருளாதார நாடாக இந்தியா இன்று திகழ்கிறது. டிஜிட்டல் துறை மேக் இன் இந்தியா திட்டம் குறித்து மக்கள் பெருமை கொள்கின்றனர். கடந்த 12 ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் இந்தியா விரைவாக முன்னேறி உள்ளது. இத்தனை சாதனைகளும் கடந்த 12 ஆண்டுகளில் எட்டப்பட்டுள்ளது 12 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா பலவீனமாக இருந்தது. ஆனால், டிஜிட்டல் துறையில் இந்தியா முத்திரை பதித்து வருகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனை நூறு மடங்கு உயர்ந்துள்ளது. எல்லா நேரத்திலும் பிற நாடுகளை சார்ந்தே இருக்க முடியாது. இந்தியர்களின் கனவுகளை தடுத்து நிறுத்துவது சாத்தியமே இல்லை. இந்தியா தற்சார்பு அடைய வேண்டியது அவசியம். இந்தியாவில் மிகப்பெரிய செமிகண்டக்டர் ஆலைகள் வரவுள்ளன. 15 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் குழாய்கள் இணைக்கப்பட்டுள்ளன என்று பேசியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/developed-india-in-2047-pm-modi-speech-at-red-fort




