மதுரை மதுரையில் பைக்கில் சேலை சிக்கி பெண் பலியான நிலையில், காப்பாற்ற சென்றவரும் உயிரிழந்த சோகம் ஏற்பட்டு உள்ளது. மதுரை செக்கானூரணி அருகே மேம்பாலத்தில் செல்லும்போது, பைக்கில் சேலை சிக்கியதில் பெண் ஒருவர் தடுமாறி விழுந்து உள்ளார். இந்த நிலையில், எதிர்திசையில் இளங்கிளி என்பவர் வந்துள்ளார். அவர் உடனடியாக, அந்த பெண்ணை காப்பாற்றுவதற்காக, தடுப்புச்சுவரை தாண்டி குதித்துள்ளார். அப்போது அவர், இடைவெளி பள்ளத்தில் தடுமாறி விழுந்து காயமடைந்து உயிரிழந்து விட்டார். விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த அந்த பெண் காப்பாற்ற ஆளில்லாமல் அந்த இடத்திலேயே பலியாகி உள்ளார். அந்த பெண் தவமணி என அடையாளம் காணப்பட்டு உள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-woman-dies-after-her-saree-gets-caught-in-bike-tragic-news-that-the-person-who-went-to-save-her-also-died




