சென்னை, வணிக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி.கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- விலை உயர்வு நவராத்திரி மற்றும் ஆயுத பூஜை பண்டிகைக் கால உற்சாகத்தில் திளைத்திருக்கும் நாட்டின் சாமானிய மக்களுக்கும், சிறு வியாபாரிகளுக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசு வழங்கியுள்ள "அமிர்த கால" பரிசு இதுதானா? பண்டிகை நாட்களில் மக்களுக்கு நிம்மதியை அளிப்பதற்குப் பதிலாக, நள்ளிரவில் அறிவிக்கப்பட்ட கடுமையான வணிக சிலிண்டர் விலை உயர்வு மூலம் சிறு வணிகர்களையும் பொதுமக்களையும் பாஜக அரசு நிலைகுலையச் செய்துள்ளது. தாங்க முடியாத பேரிடி சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ஒரே அடியாக ரூ.66.50 உயர்த்தப்பட்டு, தற்போது ரூ. 2,984-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற 2014 ஜூன் மாதத்தில் வெறும் ரூ. 1,726.50 ஆக இருந்த வணிக சிலிண்டரின் விலை, தற்போது அக்டோபர் மாதத்தில் ரூ. 2,984 ஆக எகிறியுள்ளது. பாஜகவின் இந்த ஆட்சிக் காலத்தில் மட்டும் வணிக சிலிண்டர் விலை 72.8 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்து, தொழில்முனைவோர் தலையில் தாங்க முடியாத பேரிடியை இறக்கியுள்ளது. ஒருபுறம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை முன்னெடுக்கும் சிறு வணிகர்கள் மீது யு.பி.ஐ. வணிக தள்ளுபடி விகித (MDR) கட்டணத் தாக்குதல், மறுபுறம் மளமளவென ஏறிக்கொண்டே போகும் சிலிண்டர் விலை என, தெருவோர டீக்கடைகள் முதல் சிறு உணவகங்கள் வரை அனைவரின் வாழ்வாதார அடுப்புகளையும் அணைக்கும் வேலையைத்தான் மத்திய அரசு செவ்வனே செய்து வருகிறது. இதுவா மோடி அரசு வாக்குறுதி அளித்த 'வளர்ச்சி'? பண்டிகை நாட்களில் மக்களின் பாக்கெட்டுகளைக் காலி செய்து, எளிய சிறு குறு வணிகர்களின் வாழ்க்கையைப் பகற்கொள்ளையடிக்கும் மத்திய பாஜக அரசின் இந்த மக்கள் விரோத, இரக்கமற்ற போக்கு கடுமையான கண்டனத்திற்குரியது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/commercial-gas-cylinder-price-hike-manickam-thakur-condemns




