ரிஷிகாந்த் நடிக்கும் ‘மொத ராத்திரி' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை காலை 11.07 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ‘சிறை’ மற்றும் ‘யூத்’ தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் கவனம் ஈர்த்து வரும் நடிகை அனிஷ்மா. கடந்த 2023-ல் வெளியான மலையாள திரைப்படமான 'பூவன்' மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், தமிழில் சமீபத்தில் வெளியான 'சிறை' மற்றும் 'யூத்' படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். ‘மொத ராத்திரி’ தற்போது, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ‘மொத ராத்திரி’ படத்தில் அனிஷ்மா கதாநாயகியாக நடித்து வருகிறார். 'குட் பேட் அக்லி', 'டியூட்' ஆகிய படங்களை தொடர்ந்து, மைத்ரி நிறுவனம் தயாரிக்கும் மூன்றாவது தமிழ் திரைப்படம் இதுவாகும். ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு பரத் ஷங்கர் இசையமைக்கிறார். புதிதாகத் திருமணமான ஜோடியின் காதல் நகைச்சுவைத் திரைப்படமாக இது எடுக்கப்பட்டு வருகிறது. படப்பிடிப்பு நிறைவு சமீபத்தில் ‘மொத ராத்திரி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்தது. இயக்குநர் ராஜா கருப்பசாமி, “மொத ராத்திரி திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்திருப்பது எனக்கு நிறைவாக உள்ளது. எனது கதையில் நம்பிக்கை வைத்து, ஒவ்வொரு கட்டத்திலும் ஊக்கமளித்து, முழுமையான படைப்புச் சுதந்திரத்தை வழங்கிய தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் ஆகியோருக்கு என் மனப்பூர்வமான நன்றி. ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், அனைத்து நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் குழுவினர் மற்றும் அயராது உழைத்த ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றி. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மிக விரைவில் இப்படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க ஆவலுடன் உள்ளோம்” என்றார். பின்னணிப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் அடுத்த கட்ட அறிவிப்புகளுக்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, டிரெய்லர் வெளியீடு மற்றும் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டு தேதி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில், ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 11.07 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. Save the date. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/modha-rathiri-film-first-look-will-be-released-tomorrow




