இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக பேங்க் ஆப் பரோடா வங்கி உள்ளது. நாடு முழுவதும் கிளைகளுடன் செயல்பட்டு வரும் இந்த வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி (LBO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்கள் பின்வருமாறு: பணியிடங்கள்: உள்ளூர் வங்கி அதிகாரி நாடு முழுக்க மொத்த 2,482 காலியிடங்கள் உள்ளன. தமிழகத்தி மட்டும் 132 காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன. கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள பணியிடங்களுக்கு தமிழ் கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டும். ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட கமர்ஷியல் வங்கிகளில் குறைந்தது ஓராண்டு பணியாற்றியிருக்க வேண்டும். வயது வரம்பு: 20 வயது முதல் 30 வயது வரை சம்பளம் எவ்வளவு: மாதம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை சம்பளமாக வழங்கப்படும். தேர்வு முறை: ஆன்லைன் டெஸ்ட், நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணத்தை பொறுத்தவரை பொதுப் பிரிவினருக்கு ரூ.850, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.175 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் 07.09.2026 தேர்வு அறிவிப்பை படிக்க: முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/education-and-employment/bank-of-baroda-jobs-2482-vacancies-apply-now



