சென்னை, கொத்து பரோட்டா என்றெல்லாம் கொச்சையாகப் பேசுவதா?" - தி.மு.க. கேள்வி! இது தொடர்பாக தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- விஜயின் குதிரை பேர அரசியல் - கவர்னர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவோம். அதிமுக வின் எச்சில் இலைகளை சேர்த்துக்கொண்டுள்ள விஜய், கொத்து பரோட்டா என்றெல்லாம் கொச்சையாக பேசுவதா. குதிரைபேர ஊழல் கரூரில் முதல்-அமைச்சர் விஜய் பேசியது தொடர்பாக உச்ச நீதிமன்ற வழிகாட்டல்படி ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக் குழுவிடமும், சி.பி.ஐ.யிடமும் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல்-அமைச்சர் விஜய் குதிரைபேர ஊழலில் ஈடுபட்டுள்ளார் என்பதை வைகோ அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏற்கனவே கடந்த 4-ம் தேதி கவர்னரை சந்தித்து ஆதாரத்தோடு புகார் அளித்தோம். புகார் அதேபோல விஜயபாஸ்கர் அவர்களும் வெளிப்படையாகவே செய்தியாளர்கள் கூட்டத்திலே என்னை த.வெ.க.வில் வில் வந்து சேரும்படி கேட்டுக்கொண்டார்கள் ஆகவேதான் நான் ராஜினாமா செய்கிறேன் என்று சொல்லி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவரும் சேர்ந்துவிட்டார். ஆக இதெல்லாம் குதிரைபேர ஊழலுக்கு தகுந்த ஆதாரங்கள் என்பதை சுட்டிக்காட்டி கவர்னரிடத்தில் இன்று மீண்டும் ஒருமுறை திமுகவின் சார்பில் புகார் கொடுத்திருக்கிறோம். கொச்சையாக பேசுகிறார் விஜய் பேசும்போது கொத்து பரோட்டா என்றெல்லாம் கொச்சையாக பேசுகிறார். கரூர் விஜய பாஸ்கர், விராலிமலை விஜயபாஸ்கர் ஆகிய இருவருமே நாங்கள் சாப்பிட்டு போட்ட இரண்டு இலைதான் அதை த.வெ.க.வில் இணைத்து கொண்டுள்ளனர் என அ.தி.மு.க.வினரே விமர்சித்து உள்ளனர். ஆகவே எச்சில் இலையை வைத்து ஒரு விழா நடத்துகிறார். அதில் ஏற்கனவே வெளியிட்ட கரூர் அறநிலையத்துறை நிலம் தொடர்பான அரசாணையை ஏதோ இவரிடம் கோரிக்கை வைத்து அதன் பிறகு வெளிடுவதுபோல ஒரு நாடகத்தை நடத்தி காட்டியுள்ளார். பெரிய நாடகம் இந்த நாடகம் நடந்தது 10-ஆம் தேதி; ஆனால், 9-ஆம் தேதியே அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுவிட்டது. இது எவ்வளவு பெரிய பித்தலாட்டம், எவ்வளவு பெரிய நாடகம் ஆக, இப்படிப்பட்ட நாடகங்களை இவர்கள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் முடிவுகட்டுகிற வகையில் தி.மு.க. சார்பில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். முதல்-அமைச்சர் விஜய்யின் இந்த குதிரைபேர புகாரின் பேரில் கவர்னர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், தி.மு.க. சார்பில் கண்டிப்பாக நீதிமன்றத்தை நாடுவோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/is-it-appropriate-to-use-crude-language-like-kothu-parotta-dmk-asks




