கிளாஸ்கோ, காமன்வெல்த் விளையாட்டில் வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் சீமா கலிராம்னா வெண்கலப் பதக்கம் வென்றார். காமன்வெல்த் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 74 நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பல்வேறு பிரிவுகளில் பதக்கங்களுக்காக போட்டியிட்டு வருகின்றனர். சீமா கலிராம்னாவுக்கு வெண்கலம் கிளாஸ்கோவில் உள்ள ஸ்காட்ஸ்டவுன் மைதானத்தில் நடைபெற்ற மகளிருக்கான வட்டு எறிதல் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை சீமா கலிராம்னா 58.65 மீட்டர் தூரம் வட்டை எறிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். தங்கம் வென்ற ஜமைக்கா வீராங்கனை இந்தப் போட்டியில் ஜமைக்காவின் சமந்தா ஹால் 61.66 மீட்டர் தூரம் வட்டை எறிந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். கனடாவின் ஜுலியா டங்க்ஸ் 60.67 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/othersports/cwg-2026-seema-kaliramna-wins-bronze-medal-nidhi-rani-finishes-fourth-in-womens-discus-throw-final




