ஸ்ரீவிஜயபுரம், இந்தியாவின் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், 2 நாட்கள் சுற்றுப்பயணமாக அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு செல்ல உள்ளார். இதற்காக வரும் ஆகஸ்ட் 8-ந்தேதி அந்தமான் தலைநகர் ஸ்ரீவிஜயபுரத்திற்கு(போர்ட் பிளேர்) அவர் செல்ல உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படைக்கு சொந்தமான 'ஐஎன்எஸ் உத்கரோஷ்' (INS Utkrosh) சிறப்பு விமானம் மூலம் அந்தமான் பயணத்தை மேற்கொள்ளும் சி.பி.ராதாகிருஷ்ணன், 8-ந்தேதி மதியம் 1 மணியளவில் ஸ்ரீவிஜயபுரம் சென்றடைவார். அவரை அந்தமான் மற்றும் நிக்கோபார் துணைநிலை கவர்னர் டி.கே.ஜோஷி, அந்தமான் மற்றும் நிக்கோபார் கமாண்ட் பிரிவின் மூத்த அதிகாரிகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் வரவேற்க உள்ளனர். இந்த பயணத்தின்போது, சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, தேசிய நினைவுச் சின்னமான செல்லுலார் சிறைச்சாலைக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் செல்ல உள்ளார். தொடர்ந்து நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவு (ராஸ் தீவு) மற்றும் வைப்பர் தீவு ஆகிய இடங்களுக்கும் அவர் செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டங்களை ஆய்வு செய்வதற்காக, உள்ளூர் நிர்வாக அதிகாரிகளுடன் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்துரையாட உள்ளார். பின்னர் ஸ்ரீவிஜயபுரத்தில் உள்ள டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில், 'ஹர் கர் திரங்கா' (ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி) இயக்கம் குறித்த சிறிய கூட்டத்தில் அவர் உரையாற்றும் சி.பி.ராதாகிருஷ்ணன், ஆகஸ்ட் 9-ந்தேதி மாலை தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துவிட்டு டெல்லி திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/vice-president-cp-radhakrishnan-to-visit-andaman-on-the-8th




