சென்னை, தி.மு.க. எம்.எல்.ஏ. கைது விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் ஜி.வி.மார்க்கண்டேயன். இவர் கோவில்பட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து போலீசார் கடந்த 20-ந்தேதி காலையில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வை கைது செய்தனர். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சுமார் 11 மணி நேர விசாரணைக்கு பிறகு அவரை இரவில் தூத்துக்குடி முதலாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 3-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். ஜாமின் மனு தள்ளுபடி இதனால் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தரப்பு வக்கீல்கள் ஜாமீன் கோரி, கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று காலை நடைபெறுவதாக இருந்தது. இதற்கிடையே மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கோரி மனுதாக்கல் செய்தனர். இதனால் 2 மனுக்கள் மீதான விசாரணை மதியம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தூத்துக்குடி முதலாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி சுமதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மனுதாரர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களின் தன்மை மற்றும் தீவிரத்தன்மை, குற்றம் சாட்டப்பட்டவர் சாட்சியங்களைச் சிதைப்பதற்கான சாத்தியக்கூறு ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி சுமதி உத்தரவிட்டார். மேலும், காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்காக போலீசார் தாக்கல் செய்த அனுமதி மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார். இன்று பிற்பகல் விசாரணை இந்த நிலையில், அவதூறு வழக்கில் ஜாமீன் கோரியும், சிறையில் அடைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரியும் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக்கோரி நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு முறையிடப்பட்டது. மனுதாரரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி இன்று பிற்பகல் 2.15 மணிக்கு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/vilathikulam-dmk-mlas-bail-plea-hearing-this-afternoon




