Fuld artikel
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தவெகவில் அதிகாரபூர்வமாக இணைந்திருக்கின்றனர். தவிர பல அதிமுக முன்னாள் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் தவெகவில் இணைந்திருக்கின்றனர். இந்த இணைப்பு விழாவில் பேசிய எம். ஆர்.விஜயபாஸ்கர், "இயக்கத்தை அமைத்த இரண்டே ஆண்டுகளில் முதல்வர் விஜய் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார். தீயசக்தி திமுகவை ஒழிக்க வேண்டும் என்று அம்மா போராடினார். அவரது மறைவிற்கு பிறகு இப்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக இருக்கக்கூடியவரை நாங்கள் எல்லோரும் தான் தேர்வு செய்தோம். எம்.ஆர் விஜயபாஸ்கர் ஆனால் அவரின் தவறான முடிவுகளால் இந்த இயக்கம் தள்ளாடி கொண்டிருக்கிறது. எங்களை துரோகி என்று சொல்கிறார். ஆனால் உண்மையில் யார் துரோகி என்று உங்களுக்கு தெரியும். திமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பது சரியா? 42 ஆண்டுகள் அதிமுகவில் உறுப்பினராக இருந்து 22 ஆண்டுகள் தீவிர அரசியலில் இருந்தவன் நான். அம்மாவால் அடையாளம் காட்டப்பட்டு 5 ஆண்டுகள் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தேன். கரூர் என்று சொன்னாலே உங்களுக்கு தெரியும். தவெக வரலாற்றில் அது ஒரு கரும்புள்ளி. தளபதி கரூர் வரும்போது 41 உயிர்கள் பறிப்போனது. 234 தொகுதிகளிலும் உற்றுநோக்கும் ஒரு தொகுதியாக கரூர் இருக்கிறது. ஏன்னென்றால் அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்கள், பணத்திமிரை வைத்திருப்பவர்களுக்கு மத்தியில் நாங்கள் வெற்றி பெற்றோம். எம்.ஆர் விஜயபாஸ்கர் ஆனால் நாங்கள் தவெகவில் இன்று இணைந்திருக்கிறோம் என்று சொன்னால் அரசியல் நிலை எப்படி இருக்கிறது என்று உங்களுக்கு தெரியும். ஒரு தலைவர் சரியாக இல்லை என்றால் அந்த இயக்கம் எப்படிப் போகும் என்பதற்கு அதிமுக ஒரு உதாரணம். இனிமேல் தமிழகத்தில் புரட்சி தளபதி ஆட்சிதான். இந்த இயக்கம் தொடர்ந்து வெற்றி பெறுவதற்காக உழைப்போம்" என்று சொல்லி இணைப்பு விழாவில் எம்.ஆர் விஜயபாஸ்கர் பேசியிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Fuld artikel — se linket nedenfor



