சென்னை, கடந்த 2025 செப்டம்பர் 27 அன்று கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகி இருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, இந்த சம்பவத்தில் பலியான 31 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கி முதல்-அமைச்சர் விஜய் உத்தரவுகளை நேரில் வழங்கி இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கானது இன்று ஐகோர்ட் மதுரை கிளைக்கு விசாரணைக்கு வந்தது. மேல்முறையீடு இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசுப்பணி ஆணையை ரத்து செய்து ஐகோர்ட் மதுரை கிளை இன்று உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யவுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் வாதங்களை கேட்காமலேயே ஐகோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும், இதனால் நாளையே மேல்முறையீடு செய்யப்போவதாகவும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/government-job-cancellation-appeal-to-supreme-court-tomorrow-minister-nirmal-kumar




