கவுகாத்தி, அரசு ஊழியர்கள் 2-வது திருமணம் செய்தால் சம்பளம் குறைக்கப்படும் என அசாம் அரசு தெரிவித்துள்ளது. அசாம் மாநிலத்தில் பலதார திருமணத்தைத் தடை செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது அசாம் அரசு, மற்றொரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் 2-வது திருமணம் செய்யும் அரசு ஊழியர்களின்சம்பளத்தில் இருந்து 20 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். அந்தத் தொகை முதல் மனைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா அறி வித்துள்ளார். இதற்காக முதல் மனைவி அரசிடம் விண்ணப்பிக்க வேண்டும். விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும், சம்பளப் பிடித்தம் தொடரும். சட்டரீதியான நடவடிக்கைகள் முடியும் வரை முதல் மனைவி எந்தச் சிரமங்களையும் சந்திக்காமல் இருப்பதற்காக, அவருக்கு நிதி உதவி வழங்குவதே தங்களின் நோக்கம் என்று அவர் கூறினார். இந்த முடிவை தனியார் துறை ஊழியர்களுக்கும் செயல்படுத்தத் திட்டமிட்டப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் தங்களின் வயதான பெற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி உடன்பிறப்புகளை புறக்கணித்தால் அவர்களது சம் பளத்தில் இருந்து 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு, அந்தத் தொகை நேரடியாக அவர்களின் பெற்றோர் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/assam-staff-may-face-20-pay-cut-for-2nd-marriage-without-divorce




