சேலத்தில் நேற்று (செப்.19) நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் பேசிய அவர், " சத்துணவு திட்டத்தை கொண்டு வந்து சரித்திரம் படைத்தவர் எம்ஜிஆர். இன்று கூட காலை உணவு போடுகிறேன் என்கிறார்கள். ஏற்கனவே வந்த திட்டத்தையே தமிழக வெற்றிக் கழகம் அறிவித்திருக்கிறார்கள். அறிவிக்க தான் முடியும் புதிய திட்டத்தை இந்த ஆட்சியால் கொண்டு வர முடியாது. எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே ஜெயலலிதா தலைமையிலான அரசு இருந்தபோது காலை உணவு திட்டத்தை தனியார் பங்களிப்போடு கொண்டு வந்தோம். நான் முதலமைச்சராக இருந்த காலத்தில் தொடங்கி வைத்த பிறகு திமுக அந்த திட்டத்தை தொடர்ந்தார்கள். ஆட்சி மாற்றத்திற்கு பிறகு இந்த அரசாங்கம் வேற பெயரை வைத்து துவங்கி இருக்கிறது. ஆட்சிக்கு வந்ததில் இருந்து தலைகால் புரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். என்ன பேசுவதென்றே தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். "துணை பொதுச்செயலாளர் பதவி வேண்டும் என்று என்னிடம் கேட்டார்"- ஆதவ் அர்ஜுனா குறித்து எடப்பாடி ஏற்கனவே அ.தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு பெயர்களை மாற்றி வைத்திருக்கிறார்கள். அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களுக்கு வேறு பெயர் சூட்டி மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அந்த திட்டங்களை கொண்டு வந்தது அ.தி.மு.க. ஆட்சிதான். ஏழை பெண்களின் திருமணத்திற்காக அதிமுக ஆட்சியில் அம்மாவின் சிந்தனையில் உதித்த அருமையான திட்டம் தாலிக்கு தங்கம் திட்டம். அந்த திட்டத்தின் பெயரையும் மாற்றியிருக்கிறார்கள். இன்னும் அந்த திட்டம் தொடங்கப்படவில்லை. முதல்வர் விஜய் மூலதனமே ரீல்ஸ். ரீல்.தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை பொறுத்தவரை, ஏழைகளுக்கு ஒரு கிராம் தங்கம் வழங்குவதில் தவறு இல்லை. ஆனால், அந்த திட்டத்திற்கு எவ்வளவு பெரிய வடிவமைப்பு கொடுக்கிறார்கள் பாருங்கள். அதிமுக ஆட்சியில் தொடங்கபட்ட திட்டங்களுக்கு விளம்பரம் செய்ததில்லை. ஆனால் தற்போது ஒரு ரூபாய் செலவு செய்துவிட்டு, ஒரு லட்சம் ரூபாய்க்கு விளம்பரம் செய்கிறார்கள். த.வெ.க. கட்சியின் மூலதனமே ரீல்ஸ். ரீல். இதை வைத்துக்கொண்டு ஆட்சிக்கு வந்துவிட்டார்கள்” என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/edappadi-palanisamy-slams-tvk




