பெங்களூரு, 20-வது ஆசிய விளையாட்டு போட்டி வருகிற 19-ந்தேதி முதல் அடுத்த மாதம் 4-ந்தேதி வரை ஜப்பானின் அய்ச்சி மற்றும் நகோயா நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டிக் கான இந்திய அணியில் முதலில் 492 பேர் இடம் பிடித்து இருந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை 503-ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் மொத்தம் 36 விளையாட்டுகளில் களம் காணுகிறார்கள். இது தவிர பயிற்சியாளர், அதிகாரிகள், உதவியாளர்கள், உடல்தகுதி நிபுணர்கள் என 246 பேர் அவர்களுடன் செல்வதற்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. மேலும் 19 அதிகாரிகள், நிர்வாகிகளும் இடம் பெற்றுள்ளனர். ஆக மொத்தம் 768 பேர் கொண்ட படை ஆசிய விளையாட்டுக்கு பயணிக்கிறது. அதிகபட்சமாக தடகளத்தில் 77 பேர் இடம் பெற்று இருக்கிறார்கள். இதையொட்டி இந்திய தடகள சம்மேளன தலைவர் பகதூர் சிங் சாகு லூதியானாவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், 'ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் விலகி இருப்பதால் அவருக்கு பதிலாக காமன்வெல்த் விளையாட்டில் பதக்கம் வென்ற மற் றொரு ஈட்டி எறிதல் வீரர் யாஷ்விர் சிங்கை சேர்த்துள்ளோம். இது காயமடைந்த வீரருக்கு பதிலாக மாற்று என்பதால் இதில் எந்த பிரச்சினையும் இல்லை. அதே நேரத்தில் சில சிக்கல்கள் காரணமாக நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரர் அபிஷேக் நீக்கப்பட்டுள்ளார். காயத்தில் இருந்து மீளாத 110 மீட்டர் தடை தாண்டி ஓடும் வீரர் தேஜஸ் ஷிர்சும் விடுவிக்கப்பட்டுள் ளார். எனவே இது தான் (தடகளத்தில் 77 பேர்) ஆசிய விளையாட்டு போட்டிக்கான இறுதி அணியாகும்' என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/cricket/yashvir-replaces-neeraj-chopra-in-the-athletics-squad-for-the-asian-games




