‘ஒரே உலகம், ஒரே மனிதகுலம்’ என்கிற நிகழ்ச்சி நேற்று (ஆகஸ்ட் 29) நியூயார்க்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் இந்து - முஸ்லிம் குறித்து மோகன் பகவத் பேசியதாவது. “இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கக் கூடாது என்று எந்தவொரு இந்து நினைத்தாலும், அவர் இந்துவாகவே இருக்க முடியாது. உங்களை இந்து என்று நீங்கள் அழைத்துக் கொள்ள வேண்டுமானால், ‘எல்லாப் பாதைகளும் ஒரே இலக்கை நோக்கியே செல்கின்றன’ என்றும், ‘ஒவ்வொரு மனிதனுக்கும் சுயமரியாதை உண்டு’ என்றும் நீங்கள் நம்ப வேண்டும். மோகன் பகவத்ஸ்டாலின் பாதுகாப்பு Z+-ல் இருந்து Z ஆக குறைப்பு; காரணம் என்ன? மனிதர்களுக்கு இடையே எந்தப் பாகுபாடும் இல்லை. நான் ஒரு சமய அறிஞரோ அல்லது மத அதிகார அமைப்போ கிடையாது. ஆனால், ‘மதங்கள் வேறாக இருக்கலாம், ஆனால் மனிதநேயம் ஒன்றுதான், உண்மை ஒன்றுதான். மனிதகுலம் என்பது அந்த உண்மையின் விளைவே’ என்று பாரம்பரியமாகச் சொல்லும் ஒரு சமூகத்தில் நான் பணியாற்றுகிறேன்” என்று பேசியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/mohan-bhagwat-hinduism-has-no-place-for-anti-muslim-thinking



