நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் ‘தி இந்தியா ஸ்டோரி’ படம் வெளியாக இருக்கிறது. தவிர நிதிஷ் திவாரி இயக்கத்தில் 2 பாகங்களாக உருவாகும் ‘ராமாயணா’ என்ற பான் இந்தியா படத்தில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் பாலகிருஷ்ணாவின் 111வது படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பிகினி ஆடை அணிவது குறித்து காஜல் அகர்வால் பேசியிருக்கிறார். ‘தி இந்தியா ஸ்டோரி’ இதுதொடர்பாக பேசிய அவர், "நான் எந்தவொரு திரைப்படத்திலும் இதுவரை பிகினி காட்சிகளில் நடித்ததில்லை. எனக்கு பிகினி உடை அணிந்து நடிப்பதில் உடன்பாடு இல்லை. அது முற்றிலும் எனது தனிப்பட்ட விஷயம் என்று நம்புகிறேன். அதுபோன்ற தோற்றத்தில் திரையில் தோன்றுவதில் எனக்கு துளியளவும் விருப்பம் இல்லை. இதயம் முரளி: "தமிழில் நான் முதல் முறையாக ஒப்பந்தமான படம்தான்!" - கயாடு லோஹர் தேவையில்லாத காட்சிகள் இருக்கும் பல திரைப்படங்களை நான் நிராகரித்தும் இருக்கிறேன். அது எவ்வளவு பெரிய பட்ஜெட் படமாக இருந்தாலும், எவ்வளவு முக்கியமான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, எனக்கு கவலை இல்லை. தனது மகனுடன் காஜல் அகர்வால் எனக்கென்று சில தனிப்பட்ட எல்லைகள் உள்ளன. ஒரு தாயான பிறகு, என் குழந்தை எனது திரைப்படங்களைப் பார்க்கும்போது அசௌகரியமாக உணர்வதை நான் விரும்பவில்லை. என் மகன் என் திரைப்படங்களைப் பெருமையோடு பார்க்க வேண்டும் என்று மட்டுமே நான் விரும்புகிறேன்" என்று பேசியிருக்கிறார். Kajal Agarwal: "அது தூக்கமற்ற இரவுகளைத்தான் தந்தது." - காஜல் அகர்வால் அதிர்ச்சி! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://cinema.vikatan.com/kollywood/actress-kajal-agarwal-about-wearing-bikini-dress




