சென்னை, தூய்மையான மற்றும் பாதுகாப்பான கட்டுமானத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது நேற்று (04.07.2026) ஒரு நாள் மட்டும் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 12 மண்டலங்களில் ரூ.12.25 லட்சம் அபராதம் விதித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- கட்டுமான நெறிமுறைகள் தூய்மையான மற்றும் பாதுகாப்பான கட்டுமானம் கட்டுவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது உரிய அபராதம் மற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நேற்று (04.07.2026) ஒரு நாள் மட்டும் பெருநகர சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலம், வார்டு-108க்குட்பட்ட பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அடுக்குமாடி கட்டிவரும் தனியார் நிறுவனத்தினர் தூய்மையான மற்றும் பாதுகாப்பான கட்டுமானத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாமல் மீறியதைத் தொடர்ந்து அந்நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதம் உள்பட பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள திருவொற்றியூர், மணலி, தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் உள்ளிட்ட 12 மண்டலங்களில் தூய்மையான மற்றும் பாதுகாப்பான கட்டுமானம் வழிமுறைகளை பின்பற்றாதவர்களிடமிருந்து ரூ.12.25 லட்சம் அபராதம் விதித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/construction-violation-in-chennai-rs-1225-lakh-fine-in-a-single-day




