பெங்களூரு, பெங்களூருவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இயங்கும் போக்குவரத்து கேமரா, இருசக்கர வாகன ஒட்டி முதுகில் சுமந்து சென்ற கிடார் இசைக்கருவி பையைப் பின்னால் அமர்ந் திருப்பவராகத்தவறுதலாகக் கணித்து, தலைக்கவசம் அணியவில்லை எனக் கூறி ரூ.500அபராதம் விதித்துள்ள சுவாரசியமான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஹெப்பாலில் இருந்து டின் பேக்டரி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகன ஓட்டிக்கு, வாகனத்தின் பின்னால் அமர்ந்து வந்தவர் தலைக்கவசம் அணியவில்லை என்று கூறி மின்னணு அபராத ரசீது வந்துள்ளது. அதனுடன் இணைக்கப்பட்டிருந்த புகைப்படத்தைப் பார்த்த வாகன ஒட்டி பெரும் அதிர்ச்சி அடைந்தார். அந்தப் புகைப் படத்தை அருகில் சென்று பெரிதாக்கிப் பார்த்தபோது பின்னால் இருந்தது தனது முதுகில் மாட்டியிருந்த கிடார் பை என்பது தெரியவந்தது. கிடார் இசைக்கருவியை ஏஐ கேமரா பின்னால் அமர்ந்திருப்பவராகத் தவறுதலாக அடையாள கண்டுள்ளது. இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, தானியங்கு போக்குவரத்து கண்காணிப்பு கேமரா குறித்து இணையவாசிகள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/rs-500-fine-for-a-person-carrying-a-guitar-on-a-two-wheeler-what-is-the-reason




