நகரி, ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கூடூர் மண்டலம் அனந்தாயிபேட்டையில் ரஜினி (வயது 60) என்பவர் தனது மகள் கவுரி (40), மருமகள் மதுபாலா (35) ஆகியோருடன் வசித்து வந்தார். அவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் ஒரே நேரத்தில் தங்கள் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட னர். தகவல் அறிந்த கூடூர் போலீசார் அவர்களது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மசூலிப்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இவர்களது மரணத்துக்கு குடும்பத்தகராறு தான் காரணம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்நிலையில் போலீசார் அவர்களின் உயிரிழப்பு தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/three-women-of-a-family-found-dead-in-krishna-district




