உலகின் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் மையம்தான் சிலிக்கான் பள்ளத்தாக்கு. இது அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள சான் பிரான்சிஸ்கோவில் அமைந்திருக்கிறது. உலகில் ஐ.டி படித்தவர்களின் கனவு இடம் இது என்று சொல்லலாம். இந்தக் கனவு இடத்தில்தான் பாலியல் குற்றச்சாட்டுகள் தற்போது எழுந்துள்ளன. செய்தி என்ன? அமெரிக்காவின் நியூயார்க் போஸ்ட் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சிலிக்கான் பள்ளத்தாக்கில் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சிலிக்கான் பள்ளத்தாக்குஜம்மு காஷ்மீர்: CISF வீரர்களிடையே வாக்குவாதம்; 4 வீரர்களைச் சுட்டுக்கொன்ற தலைமைக் காவலர் அவர்களின் பெயர் அடங்கிய ஒரு ரகசிய ஸ்ப்ரெட்ஷீட் வெளியாகி உள்ளது. இதில் முன்னணி முதலீட்டாளர்கள், தொழிலதிபர்கள், தொழில்நுட்பம் மற்றும் ஏ.ஐ துறையின் மிகப்பெரிய நிறுவனங்களோடு தொடர்புடைய நபர்களின் பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன என்று கூறப்படுகிறது. எப்படி வெளிவந்தது? சிலிக்கான் பள்ளத்தாக்கில் பணிபுரியும் பெண்கள் ஒருவருக்கு ஒருவர் பாலியல் அத்துமீறல்கள் குறித்து எச்சரித்துக்கொள்ள ‘விஸ்பர் நெட்வொர்க்’ (Whisper Network) என்னும் ரகசிய அமைப்பைப் பயன்படுத்துகிறார்கள். அந்த அமைப்பில்தான் இந்த ஸ்ப்ரெட்ஷீட் வெளியாகி உள்ளது. அந்த ஸ்ப்ரெட்ஷீட்டில் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து, பாலியல் துன்புறுத்தல் செய்வது, பாலியல் வன்கொடுமை செய்வது போன்ற குற்றச்சாட்டுகள் அடங்கியுள்ளன. இது சிலிக்கான் பள்ளத்தாக்கிற்குள்ளேயேதான் இப்போதும் ஷேர் ஆகி வருகிறது. இன்னும் வெளிப்படையாக எங்கும் வெளியாகவில்லை. ஏன் வெளிச்சத்திற்கு வரவில்லை? நியூயார்க் போஸ்ட்டின் தகவலின்படி, அந்த ஸ்ப்ரெட்ஷீட்டில் இடம்பெற்றுள்ள பெயர்கள் அனைத்தும் புகழ்பெற்ற முதலீட்டாளர்கள், தொழிலதிபர்களின் பெயர்கள். சக்திவாய்ந்த இவர்கள் குறித்துக் காவல்துறையிடம் புகார் அளித்தாலோ, பகிரங்கமாகக் குற்றம்சாட்டினாலோ, தங்களுடைய வாழ்க்கை என்ன ஆகும் என்கிற பயம்தான் இந்தக் குற்றச்சாட்டுகளை ரகசியமாகவே வைத்திருக்கிறது. பாலியல் வன்கொடுமைஹார்முஸ் நீர்ச்சந்தியை வைத்து சூதாடும் அமெரிக்கா, ஈரான்; முற்றும் பொருளாதாரப் பிரச்னை? இந்தச் சம்பவங்கள் எப்படி நடக்கிறது? சிலிக்கான் பள்ளத்தாக்கில் நடக்கும் பெரும்பாலான பாலியல் சம்பவங்கள் ‘ஹேக்கர் ஹவுஸ்’ என்று அழைக்கப்படும் இடத்தில்தான் நடக்கிறதாம். இது நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் சந்தித்துக்கொள்ளும் இடமாகும். அமெரிக்காவிற்குப் புதிதாக வந்தவர்கள், சிலிக்கான் பள்ளத்தாக்கில் புதிதாகப் பணிக்குச் சேர்பவர்கள், தனிமையில் இருப்பவர்கள், பலவீனமாக இருப்பவர்களைத்தான் பாலியல் சம்பவங்களுக்கு இங்கு குறியாக்குகிறார்கள். இந்தக் குற்றங்களினால் பெண்கள் மட்டுமல்ல. மாற்றுப் பாலினத்தவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். நியூயார்க் போஸ்ட்டில் கட்டுரையில் விவரித்துள்ள சம்பவங்களின்படி, சிலருக்கு மயக்க மருந்து கொடுத்துப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது. இதனால், தனக்கு என்ன நடந்தது? யார் செய்தது? என்பது கூட அவர்களுக்குத் தெரியவில்லை. இன்னும் ஒருவர் கூறுகையில், தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து போலீஸில் 2021-ம் ஆண்டில் புகார் அளித்திருக்கிறார். ஆனால், குற்றம்சாட்டப்பட்ட நபரின் இடம் இன்னும் தெரியவில்லை. அதனால், அவர் கைதும் செய்யப்படவில்லை. ஆனால், இன்னும் அந்த நபர் அவரது நண்பர்களுடன் இணைப்பில்தான் இருக்கிறார் என்று சொல்கிறார். அந்தக் கட்டுரை முழுவதும் இப்படி ஏகப்பட்ட சம்பவங்கள் விரிகின்றன. செல்வாக்கு, அதிகாரங்கள் மீதான பயத்திற்குப் பின்னால் இந்தப் பாலியல் சம்பவங்கள் இன்னும் ஒளிந்துகொண்டிருக்கின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/crime/silicon-valley-secret-list-names-100-over-sex-allegations



