கரூர் மாவட்டம், மணவாசி பகுதியைச் சேர்ந்த நடனக் கலைஞர் ஜீவா. இவர் கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து நடனமாடி வந்தார். இந்நிலையில், கரூர் அருகே தொழில்பேட்டை பகுதியில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இரவு நடந்த நடன நிகழ்ச்சியில் குழுவுடன் இணைந்து கலந்து கொண்டு உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி மேடையிலேயே கீழே சரிந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். jeeva ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்நிலையில், அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், பல்வேறு மேடைகளில் தனது நடனத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்த ஜீவாவின் திடீர் மறைவு, நடனக் கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Doctor Vikatan: மூக்கில் வளர்ந்துள்ள சதை. ஆபரேஷன் இல்லாமல் கரைக்க முடியுமா? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/crime/dancer-collapses-and-dies-suddenly-on-festival-stage-fans-saddened




