சென்னை, சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் என்னுடைய தோட்டத்தில் 2 நாட்களுக்கு முன், போர்வெல் இயக்க அமைக்கப்பட்டிருந்த மின்வயர்களை திருடிச் சென்றுவிட்டனர் என எடப்பாடி பழனிசாமி கூறினார். தமிழ்நாடு சட்டசபையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- காவல்துறை மாநில வளர்ச்சிக்கு முக்கியமான துறை. கொரோனா காலகட்டத்தில் காவல்துறையினர் சிறப்பாக பணியாற்றினர். அவர்களால் பல உயிர்கள் காக்கப்பட்டது. பணி ஓய்வுக்கு ஓராண்டுக்கு முன்பே பணியிடத்தை நிரப்ப நடவடிக்கை தேவை. 29,108 காவலர்கள் புதிதாக நியமனம் என்பது போதுமானது அல்ல. 625 பேருக்கு ஒர் காவலர் என்பது போதுமானது அல்ல. காவலர்கள் எண்ணிக்கை அதிகரித்தால்தான் தமிழ்நாடு பூங்காவாக திகழும். மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப காவலர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் முறையாக பதவி உயர்வு அதிமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாக்கப்பட்டனர். சட்டம், ஒழுங்கு சீராக இருந்தது.அதிமுக ஆட்சியில் சென்னை பாதுகாப்பான நகரமாக இருந்தது. அதிமுக ஆட்சி காலத்தில் குற்றத்தை சமாளிக்க கணினி வழி புதிய பிரிவு ஏற்படுத்தினோம். அதிமுக ஆட்சியில் காவலர்களுக்கு முறையாக பதவி உயர்வு வழங்கினோம். அதிமுக ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட்டது. காவலர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும் என தவெக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். காவல் ஆய்வாளர்கள் பலர் ஓய்வு பெற உள்ளனர். அவர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி உயர்வு வழங்க வேண்டும். சிறப்பு புத்தாக்க பயிற்சி பெண் காவலர்களை இரவு நேரங்களில் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்படுவதை தவிர்க்க வேண்டும். காவலர்களின் மன அழுத்தத்தை குறைக்க அதிமுக ஆட்சியில் அளித்தது போல தவெகவும் சிறப்பு புத்தாக்க பயிற்சி அளிக்க வேண்டும்.காவல் நிலையங்களின் உள்ளே 24 மணி நேரமும் சிசிடிவி கேமராக்கள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலைகளில் உள்ள சிசிடிவி-களில் தூசுகள் படிந்து பதிவுகள் முறையாக கிடைப்பதில்லை, அதை பராமரிக்க வேண்டும்.சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் இடங்களை கண்டறிந்து, அதனை சரி செய்ய வேண்டும். மக்களிடம் ஆதாரங்கள் இருந்தாலும் போக்குவரத்து காவல்துறை அபராதம் வசூலிப்பதாக புகார் வருகிறது, அதை தடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் எடப்பாடி தொகுதியில் ஜலகண்டபுரத்தில் புறவழிச்சாலை அமைக்க 80% நிலம் எடுப்பு பணிகள் முடிந்து விட்டது. திமுக ஆட்சியில் கைவிட்ட புறவழிச்சாலை திட்டத்தை தவெக அரசு செயல்படுத்த வேண்டும். அதிமுக ஆட்சியை போல் விவசாயிகள் 22 மணி நேரம் மின் மோட்டாரை இயக்க அனுமதி வழங்க வேண்டும். பல இடங்களில் பைக்ரேஸ் வாகன ஓட்டிகளிடம் வசூலித்த அபராதத்தை கருவூலத்தில் செலுத்தாமல் வட்டிக்கு விடுவதாக செய்தி வருகிறது, கண்காணிக்க வேண்டும். இன்னும் பல இடங்களில் பைக் ரேஸ் நடப்பதாக செய்திகள் வருகிறது, அதனை தடுக்க தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இணையவழி குற்றங்களை ஆரம்ப காலத்திலேயே தடுக்க தமிழக வெற்றிக் கழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது. என் தோட்டத்தில் திருட்டு தமிழகத்தில் முதியவர்கள் தனியாக வகிக்கும் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் என்னுடைய தோட்டத்தில் 2 நாட்களுக்கு முன், போர்வெல் இயக்க அமைக்கப்பட்டிருந்த மின்வயர்களை திருடிச் சென்றுவிட்டனர். இவற்றை நான் சபாநாயகரிடம் கொடுத்துவிட்டேன் என புகைப்படங்களை காட்டி எடப்பாடி பழனிசாமி கூறினார். எளிமை. கண்ணியம். எடப்பாடி பழனிசாமிக்கு புகழாரம் முன்னாள் முதல்-அமைச்சர், குற்றச்சாட்டுகளையும், அறிவுரைகளையும், இடையூறு இல்லாமல் நன்றாக வழங்கியிருக்கிறார். இதை பார்க்கும் மக்கள் புரிந்து கொள்வார்கள். எளிமையாகவும், கண்ணியமாகவும், வஞ்சகம் இல்லாமல், வம்பு இழுக்காமல் பேசியதற்காக அவரை பாராட்டுகிறேன் என முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு துணை சபாநாயகர் ரவிசங்கர் பாராட்டு தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/electrical-wires-stolen-from-my-garden-edappadi-palaniswamis-speech-in-the-assembly



