சேலம், சேலத்தில் மின் இணைப்பு வழங்க லஞ்சம் கேட்ட பெண் உதவி பொறியாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். ரூ.7 ஆயிரம் லஞ்சம் கேட்ட உதவி பொறியாளர் சேலத்தை சேர்ந்த ஒருவர் தேங்காய் நார் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலைக்கு மின் இணைப்பு கொடுக்கும்படி சேலம் கே.ஆர்.தோப்பூரில் உள்ள மின்சார வாரிய அலுவலக உதவி பொறியாளர் கவிதா (வயது 43) என்பவரிடம் விண்ணப்பித்தார். அப்போது அவர் மின் இணைப்பு வழங்க ரூ.7 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். கைது இதையடுத்து லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர், லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தலின்படி ரசாயன பவுடர் தடவிய ரூ.7 ஆயிரத்தை உதவி பொறியாளர் கவிதாவிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கவிதாவை கைது செய்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-female-assistant-engineer-arrested-for-accepting-bribe-to-provide-electricity-connection




