2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியது. இன்னும் அது தொடர்ந்துகொண்டிருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவை பொருளாதாரத் தடை போன்ற நெருக்கடிகளை ரஷ்யாவிற்குக் கொடுத்தும் இந்தப் போர் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. சமீபத்தில் கூட, இந்தப் போரை நிறுத்த ரஷ்யாவிற்கு நெருக்கடி கொடுக்க, அமெரிக்கா ‘ரஷ்ய தடைச் சட்டத்தை’ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நேற்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். அது குறித்துத் தனது எக்ஸ் பக்கத்தில் ஜெலன்ஸ்கி. ஜெலன்ஸ்கி பதிவுஅமெரிக்கா செல்லும் ஈரான் அதிபர் - எதற்கு? ட்ரம்ப் வைத்திருக்கும் 'மூன்று' ஆப்ஷன்கள்! “நான் அதிபர் ட்ரம்பிடம் பேசினேன். இது ஒரு முக்கியமான உரையாடல். பல விஷயங்கள் குறித்து விரிவாகப் பேசினோம். நியூயார்க்கில் நேரில் சந்தித்துப் பேசப்போகிறோம். இந்தச் சந்திப்பு பல மாற்றங்களைக் கொண்டுவரலாம். தற்போது ஒரு நல்ல ராஜதந்திர முன்னேற்றம் சாத்தியமாகியுள்ளது. போர் தீவிரத்தைக் குறைப்பதற்கான வழிகள் மற்றும் அடிப்படைப் பாதுகாப்புப் பிரச்சினைகளான எரிசக்தி பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு மற்றும் மனித உயிர்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றை எதிர்கொள்வதற்கான ஐடியாக்கள் எங்களிடம் உள்ளன. இதற்காக, நாங்கள் அமெரிக்கக் குழுவுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். மிகவும் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருக்கிறோம். லின்ட்சே கிரகாம் மசோதாவில் கையெழுத்திட்டுச் சட்டமாக்கியதற்காக அமெரிக்க அதிபருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டேன். அமைதி நிலவ வேண்டும் என்பதில் நாங்கள் அனைவரும் ஒரே கருத்தைக் கொண்டுள்ளோம். உக்ரைனுடன் இணைந்து நிற்கும் அனைவருக்கும் நன்றி! உதவிக்கரம் நீட்டும் அனைவருக்கும் நன்றி!” என்று பதிவிட்டுள்ளார். 'நந்திகிராமில் ஒரு நாள்' மேற்கு வங்க இடைத்தேர்தல் களத்தில் நேற்று 'பரபர' காட்சிகள் - என்ன நடந்தது? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/zelenskyy-trump-agree-to-meet-in-new-york-over-ukraine-war



