திருச்சி, பாலக்கரை, காஜாபேட்டை மெயின் ரோட்டில் கிருஷ்ணன் கோயில் உள்ளது. அந்த கோயில் சுவற்றில் இரவு நேரத்தில் பெட்ரோல் பாட்டிலில் தீ வைத்து அதை கோயிலின் சுவரில் மர்ம நபர்கள் வீசி உள்ளனர். இதனால், அந்த கோயில் சுவற்றில் தீ பற்றி எரிந்தது. அதனை வீடியோவாக பதிவிட்டு சமூக வலைதளத்தில் ரீல்ஸ் ஆக வெளியிட்டனர். இந்நிலையில், இச்சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதியை சேர்ந்த பெரோஸ்தான் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாலக்கரை காவல் நிலைய போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், பாலக்கரையை சேர்ந்த கேசவபுஷன்(வயது: 19), முபித்(வயது: 18) ஆகிய இருவர் கோயிலின் சுவற்றில் பெட்ரோல் பாட்டிலை வீசி அதை ரீல்ஸாக எடுத்து வெளியிட்டது தெரியவந்தது. ரீல்ஸ் மோகத்தில் அவர்கள் இதனை செய்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து, இருவரையும் கைது செய்த போலீஸார் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரீல்ஸ் மோகத்தில் கோயில் சுவற்றில் பெட்ரோல் பாட்டிலில் இளைஞர்கள் இருவர் தீவைத்து வீசிய சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/crime/trichy-petrol-bottle-hurled-on-temple-wall-two-arrested




