திண்டுக்கல் திண்டுக்கல்லில் ராமர்கோவில் சந்து பகுதியில் சித்த மருத்துவத்தில் டிப்ளமோ படித்துவிட்டு, அலோபதி மருத்துவ சிகிச்சை அளித்து வந்த அமித் குமார் டிக்காதர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், பழனி ராமர்கோவில் தெரு பகுதியில் முறையான மருத்துவம் படிக்காமல் கிளினிக் நடத்தி சிகிச்சை அளிப்பதாக மாவட்ட சுகாதாரத்துறைக்கு புகார் வந்தது. அதன்பேரில் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் பாரதி உத்தரவின்பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பழனியில் உள்ள சம்பந்தப்பட்ட கிளினிக்கிற்கு சென்று ஆய்வு செய்தனர். டாக்டர் கைது பின்பு அங்கிருந்தவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பழனி சேரன்ஜீவாநகரில் குடியிருந்து வரும், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அமித்குமார் டிக்காதர் (வயது 51) என்பதும், டிப்ளமோ சித்தா படித்துவிட்டு அலோபதி முறையில் ஊசி போடுவது, சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அமித்குமார் டிக்காதரை பிடித்து பழனி டவுன் போலீசில் ஒப்படைத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து அமித்குமார் டிக்காதரை கைது செய்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/northern-state-doctor-arrested-for-providing-allopathic-treatment




