தஞ்சாவூர், தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தை சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவர் ஒருவர் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட மாணவர் கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வயிற்று வலி தாங்காமல் இன்று அந்த மாணவர் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார். இதில் அந்த மாணவரின் உடலில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பட்டீஸ்வரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/student-sets-himself-on-fire-unable-to-bear-stomach-pain-sensation-in-kumbakonam




