நாகர்கோவில், குமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும். விபத்து இல்லா குமரியை உருவாக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதற்காக போலீசாரின் கண்காணிப்பை தீவிரப்படுத்த அவர் உத்தரவிட்டுள்ளார். வழக்குப்பதிவு அதன்படி நாகர்கோவில் மாநகரில் நேற்று மது போதையில் வாகனம் ஒட்டியதாக 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதன்மூலம் கடந்த ஒரு வாரத்தில் மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய வாகன சோதனையில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 107 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல விதிகளை மீறி கனிம வளங்களை ஏற்றி சென்ற 34 டாரஸ் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/in-kumari-107-cases-have-been-registered-in-the-last-week-alone-do-you-know-why




